ஒரே சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர் மட்டுமே! - மன்சூர் அலிகான் 

ஒரே சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர் மட்டுமே! - மன்சூர் அலிகான் 

Published on

சென்னை: எம்ஜிஆர் மட்டுமே ஒரே சூப்பர்ஸ்டார் என்று நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘கிக்’. கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இதனை இயக்கியுள்ளார். தான்யா ஹோப் நாயகியாக நடிக்கிறார். ராகிணி திவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா, முத்துக்காளை உட்பட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இந்தப்படத்துக்கு சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (ஆக 27) சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்குப் பிறகு நடிகர் மன்சூர் அலிகானிடம் செய்தியாளர்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

“யாரை யாருடன் ஒப்பிட்டாலும் அவரவர் அவரவர் இடத்தில் இருக்கின்றனர். அடுத்து இளமையாக இருப்பவர்கள் மேலே வரவேண்டும். என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு சூப்பர்ஸ்டார்தான். அது எம்ஜிஆர் மட்டுமே” இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்.

சமீபத்தில் நடந்த ‘ஜெயிலர்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் காக்கை - பருந்து குறித்து ரஜினி கூறிய குட்டிக் கதை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. இதனையடுத்து யார் உண்மையான சூப்பர்ஸ்டார் என்று இரு தரப்பு ரசிகர்களிடையே ஆன்லைன் மோதல் ஏற்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in