ஆக்‌ஷன் ஹீரோவாகிறார் விமல்

ஆக்‌ஷன் ஹீரோவாகிறார் விமல்
Updated on
1 min read

சென்னை: ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை தயாரித்துள்ள படம், ‘துடிக்கும் கரங்கள்’. விமல் நாயகனாக நடித்துள்ளார். மிஷா நரங், சதீஷ், சுரேஷ் மேனன், சவுந்தர்ராஜா, இயக்குநர் சண்முகம், சங்கிலி முருகன் உட்பட பலர் நடித்துள்ளனர். வேலுதாஸ் இயக்கியுள்ளார். மணி சர்மாவின் சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார். ராமி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குநர் வேலுதாஸ் கூறியதாவது:

இதில் நடிகர் விமல் முதன் முறையாக முழு ஆக்‌ஷன் ஹீரோவாகநடித்துள்ளார். அவர் கதைப்படி பிரபலமான யூடியூபர். தன் பேரனை தேடிசென்னைக்கு வரும் முதியவர் ஒருவருக்கு விமல் உதவுகிறார். அதனால் ஏற்படும் பிரச்சினைகள்தான் கதை. உண்மைக் கதையின் அடிப்படையில் உருவாக்கி இருக்கிறோம். ரஜினி பட டைட்டில் ஏன் என்று கேட்கிறார்கள். இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருந்ததால் வைத்துள்ளோம். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க முதலில் விமல் தயங்கினார். இந்தக் கதைக்குத் தேவை என்று சொல்லி அவரை நடிக்க வைத்தோம். நான் பறந்து பறந்து சண்டைப் போட்டால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார். அதனால் அவருக்கு ஏற்றவாறு காட்சிகளை மாற்றி எடுத்துள்ளோம். அடுத்த மாதம் படம் வெளியாகிறது. இவ்வாறு வேலுதாஸ் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in