மாற்றுத்திறன் குழந்தைகளை மகிழவைத்த நடிகர் சூரி!

மாற்றுத்திறன் குழந்தைகளை மகிழவைத்த நடிகர் சூரி!
Updated on
1 min read

நடிகர் சூரி பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர் மன்றம் சார்பில் (ஆட்டிசம் பாதித்த) சிறப்பு குழந்தைகளுக்கான குரல் தேடல் என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி மதுரை காந்தி மியூசியத்தில் நடந்தது.

இதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று பாடி அசத்தினர். அக்குழந்தைகளிடம் நடிகர் சூரி வீடியோ காலில் வாழ்த்தி பேசுகையில், திரைப்பட படப்பிடிப்பில் கலந்துகொள்வதால் நேரில் வர முடியவில்லை. இவர்கள் எல்லாம் கடவுளின் குழந்தைகள். இவர்களை பார்த்து கொள்ளும் பொறுப்பை கடவுள் வழங்கி இருக்கிறார். விரைவில் இவர்களை சந்திப்பேன் என்றார்.

சிறப்பாக பாடிய குழந்தைகளுக்கு, நற்பணி மன்ற நிர்வாகி ஆதிஸ்வரன் தலைமையில் இசை அரசர், இசை அரசி பட்டங்களுடன் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in