

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து அவர் ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்தப் படத்தை லைகா தயாரிக்க இருக்கிறது. இதில் அமிதாப் பச்சன், மஞ்சுவரியர், தெலுங்கு நடிகர் நானி ஆகியோர் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் நானி இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பாத்திரத்தில் சர்வானந்த் நடிக்க இருக்கிறார்கள். இவர் தமிழில் ‘எங்கேயும் எப்போதும்’,‘கணம்’ படங்களில் நடித்தவர்.