காதலருடன் இணைந்து பங்களா வாங்கினார் எமி ஜாக்சன்

காதலருடன் இணைந்து பங்களா வாங்கினார் எமி ஜாக்சன்
Updated on
1 min read

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த நடிகை எமி ஜாக்சன், ‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.தொடர்ந்து, ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி உட்பட சில படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ள அவர், இப்போது அருண் விஜய் நடிக்கும் 'மிஷன் அத்தியாயம் 1' படத்தில் நடித்துள்ளார்.

இவர், தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை காதலித்து வந்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. 2019-ல் எமி ஜாக்சனுக்குஆண் குழந்தைப் பிறந்தது. குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என்று பெயர் வைத்துள்ளார். ஜார்ஜை திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் பிரிந்தனர்.

இப்போது ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை, எமி ஜாக்சன் காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இருவரும் இணைந்து லண்டன் அருகில் உள்ள கிராமம் ஒன்றில்பங்களா வாங்கியுள்ளனர். ஏப்ரல்மாதம் வாங்கிய இந்த வீட்டை3 மாதமாக மறுசீரமைப்பு செய்துள்ளனர். இத்தகவலை,வீட்டின் புல்வெளியில் நடந்தபடிசெல்லும் புகைப்படத்தை வெளியிட்டு, சமூக வலைதளப் பக்கத்தில் எமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in