பட வாய்ப்புக்காக பாலியல் சலுகை: ரெஜினா அதிர்ச்சி தகவல்

பட வாய்ப்புக்காக பாலியல் சலுகை: ரெஜினா அதிர்ச்சி தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழில் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’,‘ராஜதந்திரம்’,‘மாநகரம்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர், ரெஜினா காஸண்ட்ரா. தெலுங்கு, இந்தியிலும் நடித்து வரும் அவர், பட வாய்ப்புக்காக பாலியல் சலுகையை எதிர்பார்க்கும் சம்பவம் தனக்கும் நடந்ததாகக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் அளித்த பேட்டியில், ‘பட வாய்ப்பில்லாமல் இருந்தபோது சிலரிடம் வாய்ப்புகள் கேட்டேன். ஒருவர் ‘அட்ஜெஸ்ட்மென்ட்’டுக்கு தயாராக இருந்தால் உடனடியாக வாய்ப்புக் கிடைக்கும் என்றார். அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. என் சம்பள விஷயம் பற்றி பேசுகிறாரோ என நினைத் தேன். பிறகுதான் என் மானேஜரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அப்போது எனக்கு 20 வயதுதான். அதன்பிறகு இதுபோன்ற சம்பவங்களை நான் எதிர்கொள்ளவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in