விசிக தலைவர் திருமாவளவனுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

விசிக தலைவர் திருமாவளவனுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
Updated on
1 min read

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொலைபேசியில் திருமாவளவனை அழைத்து நடிகர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள திருமாவளவன் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார். "பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!" என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தனது 61வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் வாழ்த்து பெற்றார். அப்போது திருமாவளவனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இம்மண்ணில் ஆழ விதைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் - புரட்சியாளர் அம்பேத்கர் கருத்துகளைத் தனது பேச்சாலும் செயல்களாலும் வளப்படுத்திடும் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில், 'திருமாமணி' எனும் மணிவிழா மலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்து வருகிறது. இதில் திக தலைவர் கீ.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ரவிக்குமார் எம்பி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in