

சென்னை: தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள ஹரால்டு தாஸ் கதாபாத்திரம் இன்று மாலை 5 மணிக்கு அறிமுகமாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் நடைபெற்றன. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை சேவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஹரால்டு தாஸ் கதாபாத்திரம் இன்று மாலை அறிமுகமாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் அர்ஜுனுக்கு இன்று பிறந்தநாள். அவர்தான் ஹரால்டு தாஸாக நடித்துள்ளதாக தெரிகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பாத்திரம் அறிமுகம் செய்யப்படுகிறது.