Last Updated : 18 Nov, 2017 08:54 PM

 

Published : 18 Nov 2017 08:54 PM
Last Updated : 18 Nov 2017 08:54 PM

தினேஷ் நடிப்பில் உருவாகும் களவாணி மாப்பிள்ளை

காந்தி மணிவாசகம் இயக்கத்தில் தினேஷ் நடிக்கவுள்ள படத்துக்கு 'களவாணி மாப்பிள்ளை' என தலைப்பிட்டுள்ளார்கள்.

'நம்ம ஊரு பூவாத்தா', 'ராக்காயி கோயில்', ’பெரிய கவுண்டர் பொண்ணு’, ’கட்டபொம்மன்’, ’நாடோடி மன்னன்’, ’மாப்பிள்ளை கவுண்டர்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நிறுவனம் ராஜபுஷ்பா பிக்சர்ஸ். 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளார்கள்.

இந்நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். 'களவாணி மாப்பிள்ளை' என்ற பெயரில் உருவாகவுள்ள இப்படத்தின் நாயகனாக தினேஷ் நடிக்கவுள்ளார். அவரோடு நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இசையமைப்பாளராக ரகுநந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x