தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ செப்டம்பர் 1 ரிலீஸ்

தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’ செப்டம்பர் 1 ரிலீஸ்
Updated on
1 min read

சென்னை: இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளால், மக்கள் மனங்களை வென்ற இயக்குநர் தங்கர் பச்சான். நீண்ட இடைவேளைக்கு பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமான படைப்பாக "கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படம் உருவாகியுள்ளது. பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு என்.கே ஏகாம்பரமும், படத்தொகுப்பை பி.லெனினும் மேற்கொண்டுள்ளனர். படத்தினை டி. துரை வீரசக்தி தயாரித்துள்ளார்.இந்நிலையில் இப்படம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in