நடிகை கீர்த்தி பாண்டியனை மணக்கிறார் அசோக் செல்வன்

நடிகை கீர்த்தி பாண்டியனை மணக்கிறார் அசோக் செல்வன்

Published on

நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன். இவர் தும்பா, அன்பிற்கினியாள் படங்களில் நாயகியாக நடித்தார். இவரும் நடிகர் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். சூது கவ்வும் படத்தில் நடிக்கத் தொடங்கிய அசோக் செல்வன், ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம், போர்தொழில் உட்பட பலவேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்தக் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

இந்நிலையில, இவர்கள் திருமணம் செப்டம்பர் 13-ம் தேதி திருநெல்வேலியில் உள்ள ரெட்டியார்பட்டியில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட இருப்பதாகவும் பின்னர் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in