“உங்களின் அன்பை எப்போதும் இதயத்தில் வைத்திருப்பேன்” - ‘ஜெயிலர்’ வரவேற்புக்கு சிவராஜ்குமார் நன்றி

“உங்களின் அன்பை எப்போதும் இதயத்தில் வைத்திருப்பேன்” - ‘ஜெயிலர்’ வரவேற்புக்கு சிவராஜ்குமார் நன்றி
Updated on
1 min read

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் சிவராஜ்குமார் கதாபாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுளார். அதில் அவர், “ஜெயிலர் படம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீங்கள் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நெல்சனுக்கு நன்றி. ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க பலர் காத்திருக்கின்றனர். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி. உங்களுடைய அன்பை எப்போதும் என் இதயத்தில் வைத்திருப்பேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் 2 நாட்களில் உலக அளவில் ரூ.150 கோடியை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in