‘சந்திரமுகி 2’-ன் முதல் சிங்கிள் ‘ஸ்வகதாஞ்சலி’ எப்படி?

‘சந்திரமுகி 2’-ன் முதல் சிங்கிள் ‘ஸ்வகதாஞ்சலி’ எப்படி?
Updated on
1 min read

சென்னை: பி.வாசு இயக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஸ்வகதாஞ்சலி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், 'சந்திரமுகி'. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா உட்பட பலர் நடிக்கின்றனர்.

லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது படத்தின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் சிங்கிளான ‘ஸ்வக்கதாஞ்சலி’ பாடல் வெளியாகியுள்ளது. பாடலை பொறுத்தவரை முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த ‘ரா.. ரா..’ பாடலின் சாயலில் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க தெலுங்கு வரிகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பரத நாட்டியத்துக்கான இப்பாடலின் வரிகள் எதுவும் பெரிதாக பிடிபடவில்லை. பாடலின் நடுவே ஹைப் ஏறி, பின்பு மெலோடிக்கு திரும்புகிறது. படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது. பாடல் வீடியோ:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in