லேடி சூப்பர்ஸ்டாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்: நயனை வாழ்த்தி விக்னேஷ் சிவன் ட்வீட்

லேடி சூப்பர்ஸ்டாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்: நயனை வாழ்த்தி விக்னேஷ் சிவன் ட்வீட்
Updated on
1 min read

"லேடி சூப்பர்ஸ்டாருக்கு, என் மரியாதைக்குரிய பெண்ணுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" என நடிகை நயன்தாராவுக்கு அவரது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "என் மரியாதைக்குரிய பெண்ணுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். துணிச்சலும் அழகும் சேர வாழ்க. நயன்தாரா என்றால் யார் என்பதை நிரூபிக்கும் கதைகளை தொடர்ந்து உருவாக்கிக்கொண்டே இருக்கவும். எப்போதும் போலவே உங்களைப் பார்த்து பெருமிதம் கொள்கிறேன். என் தங்கமே.. எனது அளவில்லா அன்பையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன். லேடி சூப்பர்ஸ்டாருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

#HBDLadySuperStarNayanthara என்ற ஹேஷ்டேக் இட்டு அவர் இந்த வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

அறம் படத்தில் நயன்தாராவின் நடிப்பில் மிளிர்ந்த கம்பீரம் அவருக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. இதனைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என்று புகழ்ந்தனர். இந்நிலையில், தற்போது நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனும் தனது பிறந்தநாள் வாழ்த்தில் லேடி சூப்பர்ஸ்டார் என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in