தொடங்கிய இடத்தில் படப்பிடிப்பை முடித்த ஐஸ்வர்யா ரஜினி

தொடங்கிய இடத்தில் படப்பிடிப்பை முடித்த ஐஸ்வர்யா ரஜினி
Updated on
1 min read

திருவண்ணாமலை: ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘லால் சலாம்’. ரஜினிகாந்த் இதில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

திருவண்ணாமலையில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலையிலேயே முடிவடைந்தது. இதுகுறித்து ஐஸ்வர்யா ரஜினி, “கடந்த 4 மாதங்களாக எங்கள் குழுவினர் கடினமாக உழைத்து இந்த படப்பிடிப்பை முடித்துள்ளோம். குறிப்பாக கடைசி 22 மணி நேரங்கள் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். என் ‘லால் சலாம்’ குடும்பத்துக்கு நன்றி. திருவண்ணாமலையில் படப்பிடிப்பைத் தொடங்கி அதே இடத்தில் முடிவடைந்தது தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது. அடுத்த கட்ட பணிக்குச் செல்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in