நள்ளிரவு 1 மணிக்கு ரஜினியை பார்க்க வந்த சிறுமி

நள்ளிரவு 1 மணிக்கு ரஜினியை பார்க்க வந்த சிறுமி
Updated on
1 min read

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் வசிக்கிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை 1.10 மணியளவில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த காவலாளியிடம் ரஜினிகாந்த்தை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, போலீஸார் சம்பவ இடம் விரைந்து, சிறுமியிடம் சாதுர்யமாக பேசி காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிறுமி, அதே பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வருவது தெரிய வந்தது.

சிறுமி பெற்றோரிடம், ஆசிரியர் ஒருவரை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு நேற்று முன்தினம் காலை சேலத்தில் இருந்து பேருந்தில் சென்னைக்கு வந்துள்ளார். பின்னர் போலீஸார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். தகவலறிந்து காவல் நிலையம் வந்த சிறுமியின் உறவினர்களிடம் போலீஸார் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு சிறுமியை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in