இரும்புத்திரை கேரள உரிமை: அதிக விலை கொடுத்து வாங்கியது ஷிபு தமீன்ஸ்

இரும்புத்திரை கேரள உரிமை: அதிக விலை கொடுத்து வாங்கியது ஷிபு தமீன்ஸ்
Updated on
1 min read

விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் 'இரும்புத்திரை' படத்தின் கேரள மாநில வெளியீட்டு உரிமை அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக விஷாலின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால் நாயகனாகவும், சமந்தா நாயகியாகவும் நடிக்க, அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் 'இரும்புத்திரை'. இந்தப் படத்தை 2018 பொங்கல் அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் கேரள மாநில வெளியீட்டு உரிமையை, 'புலி', 'இருமுகன்' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் அதிக விலை கொடுத்து பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"கடவுளின் நாடான கேரளாவில், விஷாலின் நவீன ஆக்‌ஷன் த்ரில்லரான 'இரும்புத்திரை' படத்தின் விநியோகஸ்த உரிமையை தமீன்ஸ் ஃபிலிம்ஸை சேர்ந்த ஷிபு வாங்கியுள்ளார். தமிழில் 'துப்பறிவாளன்', மலையாளத்தில் 'வில்லன்' ஆகிய படங்களின் பெரும் வெற்றிக்குப் பிறகு, விஷாலுக்கான் சந்தை கேரளாவில் பன்மடங்கு பெருகியுள்ளது. பிரம்மாண்ட பொங்கல் பண்டிகை வெளியீடாக 'இரும்புத்திரை' திட்டமிடப்பட்டுள்ளது" என விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in