

“விஜய் 68 படத்தில் நான் ஒப்பந்தமானதும் முதலில் எனக்கு வாழ்த்து கூறியது நடிகர் அஜித் தான்” என இயக்குநர் வெங்கட் பிரபு பேட்டியளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “விஜய் 68 படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ‘லியோ’ ரிலீஸ் நேரத்தில் தான் மற்ற அறிவிப்புகள் வரும். என்னுடைய இந்தப்படம் வழக்கம்போல என்டர்டெயினராக இருக்கும். அரசியல் சார்ந்த படமாக இது இருக்காது.
‘லியோ’ தான் இப்போதைய முழு கவனமும். படம் ஒப்பந்தமானதும் முதலில் அஜித் தான் வாழ்த்து தெரிவித்தார்” என்றார். மேலும், “உங்கள் பட டைட்டிலில் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் எனப் போடுவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு நான் தளபதி என்று தான் போடுவேன்” என்று கூறினார்.
முன்னதாக விஜய் 67 படமான ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் விஜய் 68 படத்துக்காக வெங்கட் பிரபுவுடன் கைகோக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.