விஜய்யின் ‘யோகன்’... 'பிரதமர்' விஜயகாந்த்... - ஜி.வி.பிரகாஷின் ‘அடியே’ ட்ரெய்லர் எப்படி?

விஜய்யின் ‘யோகன்’... 'பிரதமர்' விஜயகாந்த்... - ஜி.வி.பிரகாஷின் ‘அடியே’ ட்ரெய்லர் எப்படி?
Updated on
1 min read

சென்னை: ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘அடியே’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

‘ஏன்டா தலையில எண்ண வெக்கல’, ‘திட்டம் இரண்டு’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்ற விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள படம் ‘அடியே’. கவுரி கிஷன் நாயகியாக நடித்துள்ளார். வெங்கட் பிரபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிரபாகர் இசை அமைக்கிறார். மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கிறார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - ‘விஜய் நடித்து ‘யோகன் அத்தியாயம் ஒன்று’ படத்தின் 150-வது வெற்றி விழாவுக்கு இந்திய பிரதமர் விஜயகாந்த் செல்கிறார்’ என்ற ட்ரெய்லரின் முதல் வசனமே மொத்த வீடியோவையும் பார்க்க தூண்டுகிறது. அடுத்து ‘மியூசிக் டைரக்டர் பையில்வான் ரங்கநாதன் 2 ஆஸ்கர் வாங்கிருக்காரு’, ‘கோமாளி படத்துல ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறாரா?’, ‘விக்ரம்’ படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரம், மிஷ்கினின் ‘பொறுக்கி பய சார்’ போன்ற வசனங்களும், ‘மயக்கம் என்ன’, ‘மாநாடு’ பட ரெஃபரன்ஸ் என பகடிகள் ஏராளம். இதற்கு நடுவே காதல் என ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ட்ரெய்லர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in