ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணி படத்தில் மிருணாள் தாக்கூர்?

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணி படத்தில் மிருணாள் தாக்கூர்?
Updated on
1 min read

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2020-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ‘தர்பார்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் எதுவும் இயக்கவில்லை. 3 ஆண்டு இடைவெளிக்குப் பின் அவர் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்குகிறார். சிவகார்த்திகேயனை பொறுத்தவரை ‘மாவீரன்’ பட வெற்றிக்குப் பிறகு அடுத்து அவரது நடிப்பில் ‘அயலான்’ வெளியாக உள்ளது. தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தலைப்பிடப்படாத ‘எஸ்கே21’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் ஏ.ஆர்.முருகதாஸூடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என கூறப்படும் நிலையில் படத்தில் நாயகியாக நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸின் ‘கத்தி’, ‘தர்பார்’ படங்களுக்கு அனிருத் இசையைமத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in