‘சந்திரமுகி 2’ படத்தின் கங்கனா ரனாவத் லுக் சனிக்கிழமை வெளியீடு

‘சந்திரமுகி 2’ படத்தின் கங்கனா ரனாவத் லுக் சனிக்கிழமை வெளியீடு
Updated on
1 min read

சென்னை: பி.வாசு இயக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் கங்கனா ரனாவத் தோற்றம் நாளை (ஆகஸ்ட் 5) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், 'சந்திரமுகி'. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் 'சந்திரமுகி 2' என்ற பெயரில் உருவாகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர்.

லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது படத்தின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ’சந்திரமுகி 2’ படத்தின் முக்கிய அங்கமான ‘வேட்டையன் ராஜா’ கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்நிலையில் கங்கனா ரனாவத்தின் தோற்றம் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தை செப்டம்பர் 15-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in