‘தேடவேண்டியது முடிவை இல்லை; ஆரம்பத்தை’ - வைபவ்வின் ‘ரணம்’ டீசர் எப்படி?

‘தேடவேண்டியது முடிவை இல்லை; ஆரம்பத்தை’ - வைபவ்வின் ‘ரணம்’ டீசர் எப்படி?
Updated on
1 min read

நடிகர் வைபவ் நடிக்கும் ‘ரணம்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான ‘சரோஜா’ படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானவர் வைபவ். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு ‘பபூன்’ படம் வெளியானது. இதையடுத்து வைபவ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘ரணம்’. ஷெரிஃப் இயக்கும் இப்படத்தில் நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மது நாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு ஆரோல் கொரல்லி இசையமைக்கிறார். வைபவ்வின் 25-வது படமாக இந்தப் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசர் எப்படி? - இம்முறை க்ரைம் த்ரில்லர் ஜானர் கதைக்களத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார் வைபவ். ‘ராட்சசன்’ பட பிண்ணனி இசையின் சாயலில் தொடங்கும் டீசர் முழுவதும் மர்மங்கள் படிந்துள்ளன. இப்படியான படங்களில் கிறிஸ்துவ தேவாலயங்கள் இல்லாமல் எப்படி?. அந்த வகையில் கிறிஸ்துவ தேவாலயம், கல்லறை என சைக்கோ மற்றும் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்துக்கான அத்தனை அம்சங்களும் கச்சிதமான காட்சிப்படுத்தப்படுள்ளன. ‘தேடவேண்டியது முடிவ இல்ல.. ஆரம்பத்த’ என்ற வசனமும் பின்னணி இசையும் கவனம் பெறுகிறது. ரிலீஸ் தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. ட்ரெய்லர் வீடியோ:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in