

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன நடிகை ஸ்ரீதேவி, அவரது அனைத்து 'புதிய முயற்சிகளுக்கும்' வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கமலுடன் 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளவர் ஸ்ரீதேவி. கமலின் 63-வது பிறந்தநாள் நவம்பர் 7 அன்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கமலுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்ரீதேவி, "அவர் அற்புதமான நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது புதிய முயற்சிகள் என்னவாக இருப்பினும் அதற்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் சொல்லும் வரை நான் அவருடன் 24 படங்களில் நடித்திருக்கிறேன் என்பதை உணரவில்லை. அவருடன் பணிபுரிந்தது சிறப்பாக இருந்தது" என்று கூறியுள்ளார்.
கமலின் அரசியல் பிரவேசம் குறித்து நேரடியாகப் பேசாமல் இருப்பதில் ஸ்ரீதேவி கவனமாக இருந்தார்.