நடிகை நமீதா மெஹந்தி புகைப்படங்கள் வெளியானது

நடிகை நமீதா மெஹந்தி புகைப்படங்கள் வெளியானது
Updated on
1 min read

நடிகை நமீதா, வீரேந்திர சவுத்தரியின் திருமணம் நாளை (வெள்ளிக்கிழமை) திருப்பதியில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், திருமண விழாவிற்கு முன் சம்பிரதாயப்படி மருதாணி வைத்துக்கொள்ளும் மெஹந்தி விழாவும் அதனைத் தொடர்ந்து நிச்சயதார்த்தமும் நடந்தது. அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை நமீதா சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

நடிகை நமீதா, குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்தவர். கடந்த 2002ம் ஆண்டு முதன்முதலில் 'சொந்தம்' எனும் தெலுங்கு படத்தில் நடித்தார்.

முன்னதாக இவர் 2001-ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் பங்கேற்று 2-ம் இடம் பெற்றார். 3-வது இடம் பெற்றவர் நடிகை த்ரிஷா.

அதன்பின்னர் 2004-ம் ஆண்டில் 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'ஏய்', 'சாணக்யா', 'பம்பரக் கண்ணாலே', 'இங்கிலீஷ்காரன்', 'கோவை பிரதர்ஸ்', பில்லா (அஜித்), 'அழகிய தமிழ் மகன்' உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி 'மாயா' என்ற ஆங்கிலப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், தயாரிப்பாளரும், நடிகருமான வீரேந்திர சவுத்ரியுடன் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நாளை (நவ.24) திருப்பதியில் உள்ள இஸ்கான்  ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலில் நடைபெற உள்ளது.

திருப்பதியில் நாளை நடைபெறும் இவரது திருமண விழாவிற்கு தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in