“பொறுமையை தவறாகப் புரிந்துகொண்டால்...” - கவனம் ஈர்க்கும் நடிகர் ராஜ்கிரணின் பதிவு

“பொறுமையை தவறாகப் புரிந்துகொண்டால்...” - கவனம் ஈர்க்கும் நடிகர் ராஜ்கிரணின் பதிவு
Updated on
1 min read

சென்னை: இஸ்லாமியர்கள் குறித்த நடிகர் ராஜ்கிரணின் சமூக வலைதள பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "இஸ்லாமியர்களுக்கு எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்துகொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...

"இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம் என்ற கொள்கையினால்" பொறுமை காக்க வேண்டும் என்று இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று பொறுமை காக்கிறோம். இந்தப் பொறுமையை தவறாகப் புரிந்துகொண்டு கண்டவர்கள் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

இப்பதிவு தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக, மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தலைமை வகித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் பற்றி கூறிய கருத்துகள் சர்ச்சையாகின. இந்தப் பின்னணியில் ராஜ்கிரணின் பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in