ட்விட்டரில் இருந்து நடிகை குஷ்பு விலகல்

ட்விட்டரில் இருந்து நடிகை குஷ்பு விலகல்
Updated on
1 min read

நடிகை குஷ்பு, சமூக வலைதளப் பக்கங்களில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் எப்போது பரபரப்பாக இருக்கும் குஷ்பு, சினிமா மற்றும் அரசியல் கருத்துகளைப் பகிர்ந்து வருவார். சமீபத்தில் உடல்நல பிரச்சினை காரணமாகத் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சிறிது காலம் சமூக வலைதளத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

‘நண்பர்களுக்கு வணக்கம். எனக்கு மருத்துவச் சிகிச்சை தேவைப்படுவதால் ரேடாரில் இருந்து விலகுகிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் பார்க்கிறேன். அதுவரை கவனமாக, பாசிட்டிவாக இருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in