விக்ரம் பிரபு, விதார்த்தின் ‘இறுகப்பற்று’ முதல் தோற்றம் வெளியீடு

விக்ரம் பிரபு, விதார்த்தின் ‘இறுகப்பற்று’ முதல் தோற்றம் வெளியீடு
Updated on
1 min read

விக்ரம் பிரபு, விதார்த் நடிக்கும் ‘இறுகப்பற்று’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

'மாயா', 'மாநகரம்', 'மான்ஸ்டர்' மற்றும் 'டாணாக்காரன்' போன்ற படங்களின் தயாரித்த பொடன்ஷியல் ஸ்டூடியோவின் அடுத்த தயாரிப்பு ‘இறுகப்பற்று’. ‘எலி’, ‘தெனாலிராமன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேதா பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது. 'இறுகப்பற்று' செப்டம்பர் மாதம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

தயாரிப்பு நிறுவனம் தரப்பில் படத்தைப் பற்றி பேசுகையில், “நாங்கள் மீண்டும் ஒரு தனித்துவமான திரைப்படத்துடன் வருகிறோம். இது உணர்ச்சிகரமான, அழுத்தமான படைப்பாக இருக்கும். இயக்குநர் யுவராஜின் திரைக்கதை நிச்சயமாக பார்வையாளர்களுக்கு, குறிப்பாக ஜோடிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in