புகைப்பிடித்தபடி வெளியான சஞ்சய் தத்தின் கதாபாத்திர அறிமுகங்கள்: நெட்டிசன்கள் விமர்சனம்

புகைப்பிடித்தபடி வெளியான சஞ்சய் தத்தின் கதாபாத்திர அறிமுகங்கள்: நெட்டிசன்கள் விமர்சனம்
Updated on
1 min read

நடிகர் சஞ்சய் தத் நடிக்கும் இரண்டு படங்களின் கதாபாத்திர அறிமுகங்கள் இன்று வெளியாகின. இரண்டிலுமே அவர் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் 65-வது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு ராம் பொதினேனியின் அடுத்த படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ மற்றும் நடிகர் விஜய்யின் ‘லியோ’ படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் ஆகியவை வெளியாகியுள்ளன. இதில் ‘டபுஸ் ஐஸ்மார்ட்’ படம் பூரி ஜெகன்னாத்தின் ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் சீக்வல்.

இதில் ‘பிக் புல்’ என சஞ்சய் தத்தின் கதாபாத்திரத்தை படக்குழு இன்று அவரது பிறந்தநாளில் போஸ்டர் வெளியிட்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரில் சஞ்சய் தத் புகைபிடித்தபடி உள்ளார்.

அதேபோல, ‘லியோ’ படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். இதில் அவரது பெயர் ஆண்டனி தாஸ் என அவரது பிறந்தநாளுக்காக படக்குழு கிளிம்ப்ஸை வெளியிட்டுள்ளது. இதிலும் சஞ்சய் தத்தின் அறிமுகக் காட்சியிலேயே அவர் புகைபிடித்தபடி இன்ட்ரோ ஆகிறார். இந்த இரண்டு படங்களின் கதாபாத்திர அறிமுகங்களிலும் சஞ்சய் தத் புகைபிடித்தப்படி இருக்கிறார். இது சினிமா ஆர்வலர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


"இதற்கு முன்பே நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து மீண்டு வந்தவர் சஞ்சய் தத். அப்படி இருக்கும் போது எதற்காக புகைப்பிடிக்கும் இது போன்ற காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவிக்க வேண்டும்? அதிலும் அவரது பிறந்தநாளன்றே, இது போன்ற போஸ்டர்கள் வெளியாவது அதிருப்தி அடைய செய்துள்ளது" என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in