ஹாலிவுட் நடிகருடன் திருமணம்: நடிகை எமி ஜாக்சன் தகவல்

ஹாலிவுட் நடிகருடன் திருமணம்: நடிகை எமி ஜாக்சன் தகவல்
Updated on
1 min read

சென்னை: ‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி உட்பட சில படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ள அவர், இப்போது அருண் விஜய் நடிக்கும் 'மிஷன் அத்தியாயம் 1' படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

இவர், இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை காதலித்து வந்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. 2019-ல் எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தைப் பிறந்தது. குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என்று பெயர் வைத்துள்ளார். ஜார்ஜை திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் பிரிந்தனர். இப்போது பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை, எமி ஜாக்சன் காதலித்து வருகிறார். இருவரும் சமீபத்தில் இந்தியா வந்தனர். ஜெய்ப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளைச் சுற்றிப் பார்த்தனர்.

எமி ஜாக்சன் கூறும்போது, இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, “இப்போது இருவரும் சிறந்த சூழலில் இருக்கிறோம். எட் வெஸ்ட்விக் என் உணர்வுகளுடன் இணைந்தவர். திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருக்கிறோம். இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்குமாக பறந்துகொண்டிருக்கிறேன். நான் நடித்துள்ள தமிழ்ப் பட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தி படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. என் மகன் ஆண்ட்ரியாஸ் இந்த உலகத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகப் படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்றேன். நான் எப்படி நடிக்கிறேன் என்பதையும் அவன் பார்க்க வேண்டும் என நினைத்தேன். அவனுக்கு நான் ஆதரவாக இருக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in