

நெய்தல் பூமியை பின்னணியாக வைத்து ‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தை இயக்கிய இராஜமோகன் தனது அடுத்த படமான ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளை முடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸுக்கான வேலைகளை கவனித்து வரும் அவரைச் சந்தித்தோம்.
‘‘என் வாழ்க்கையோடு சம்பந்தப் பட்ட கருவைத்தான் முதல் படத்தில் பதிவு செய்தேன். அது போலவே என் வாழ்க்கையில் நடந்த இன்னொரு சம்பவம்தான் ‘வான வராயன் வல்லவராயன்’. இது நிச்சயம் என்னை அடையாளப் படுத்தும்’’ என்று நம்பிக்கையுடன் பேசத்தொடங்கிய அவரிடம் நம் கேள்விகளை முன்வைத்தோம்.
உங்கள் முதல் படத்துக்கும் இரண் டாவது படத்துக்கும் இடையில் ஏன் இத்தனை நாட்கள் இடை வெளி?
என்னுடைய இந்த இடை வெளியை இந்த கதையை மெருகேற்றுவதற்காக எடுத்துக் கொண்ட இடைவெளியாகத்தான் சொல்ல முடியும். நல்ல படங் களைக் கொடுக்க இதுபோன்ற இடைவெளி தேவைதான். இப்படத் தின் கதை முழுவதும் தயாரான சமயத்தில் இதையும் முதலில் எஸ்.பி.பி.சரண் சார், நடிகர் கிருஷ்ணாவை வைத்து தயாரிப் பதாக இருந்தது. அந்த நேரத்தில் கிருஷ்ணாவின் ‘கழுகு’ பட வேலைகள், சரண் சாரின் அடுத்த சில பணிகள் என்று தள்ளிப் போனது.
ஒரு படம் ஹிட் அடித்தால் அதே பாணியில் படங்களை எடுக்கும் டிரெண்ட் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறதே. இதை நீங் கள் எப்படி பார்க்கிறீர்கள்?
நான் இப்போதுகூட மற்ற இயக் குநர்களின் கதை விவாதத்தில் கலந்துகொள்வதை பொழுது போக்காக வைத்திருக்கிறேன். நான் படத்தில் வேலை பார்த்ததை விட கதை விவாதத்தில் வேலை பார்த்ததே அதிகம். எனக்கு அது மிகவும் பிடிக்கும். ஒரு கருவை மையமாக வைத்து ஒரு கதை விவாதம் நடக்கும்போது அதேமாதிரி களத்தை பின்னணி யாகக் கொண்டு வேறொரு கதையின் விவாதமும் நடக்கும். உதாரணமான அண்ணன், தம்பி கதையை நாம் எடுத்துக்கும்போது மற்றொரு யூனிட்டும் இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொள்ளலாம். இதில் இரு யூனிட் சார்ந்தவர்களுக்கும் சம்பந்தம் இருக்காது. இதில் முதலில் ரிலீஸ் ஆகும் படம் ஹிட் அடித்தால், அந்த பின்னணியில் வரும் அடுத்த படமும் அதே பாணியில் அமையும்போது அது ‘டிரெண்ட்’ ரகமாக புரிந்துகொள்ளப்படுகி றது. ‘16 வயதினிலே’ மாதிரி ஒரு விஷயத்தை உடைத்துவிட்டுவரும் படங்களைத்தான் இங்கு டிரண்ட் செட்டிங் படங்கள் என்று சொல்லமுடியும். எல்லா காலகட் டத்திலும் தொடர்ந்து முழு காமெடி, திரில்லர் காமெடி என்று வரிசை கட்டி வரும் ஒரே மாதிரி யான படங்களை டிரண்ட்செட்டர் படங்கள் என்று சொல்ல முடியாது.
‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் கிருஷ்ணாவோடு, சின்னத்திரை நட்சத்திரம் மா.கா.பா.ஆனந்தும் நடிக்கிறாரே?
இந்தப் படத்தில் கிருஷ் ணாவுக்கு தம்பியாக நடிக்கும் கதாபாத்திரத்திற்கு ஒரு ஹீரோவை நாடினேன். அவர் கதை கேட்கவே 6 மாதங்கள் ஆகும் என்றார். கதையை கேட்டுவிட்டு காத்திருக்க சொன்னால் கூட சரி என்று இருந் திருக்கலாம். அவருக்கு பதில் வேறொரு நாயகனைத் தேடிக் கொண்டிருந்தபோதுதான் ஒரு நண்பர் மூலம் மா.கா.பா ஆனந்தின் அறிமுகம் கிடைத்தது. எங்கள் படத்தின் மூலம் வெள்ளித்திரை நாயகனாக அவர் அறிமுகமும் ஆகிறார். நன்றாக நடித்துள்ளார். அவருக்கு காமெடி நன்றாக செட் ஆகியிருக்கிறது.
யுவன் சங்கர் ராஜா பிஸியான மனித ராச்சே. அவரை எப்படி பிடிச்சீங்க?
என் முதல் படத்தில் யுவன் இசையமைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தி ருந்தேன். ஒருநாள் தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் என்னை அழைத்து ‘கதையை யுவனிடம் சொல். அவர்தான் படத்துக்கு இசையமைக்கிறார்’ என்றார். என்ன சொல்வதென்று தெரி யாமல் திகைத்து நின்றேன். அவருடன் அப்போதே ஒன்றி விட்டேன்.
இரண்டாவது படத்தின் கதையையும் போய் சொன்னேன். எதுவுமே பேசாமல் டியூனை மட்டும் கொடுத்தார். அவரது இசை இந்த படத்துக்கு கூடுதல் பலத்தைக் கொடுக்கும்.