‘சந்திரமுகி 2’ முதல் சிங்கிள் எப்போது?

‘சந்திரமுகி 2’ முதல் சிங்கிள் எப்போது?
Updated on
1 min read

சென்னை: பி.வாசுவின் 65வது படமாக உருவாகி இருக்கிறது, 'சந்திரமுகி 2'. ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே உட்படப் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்துக்கு ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இசை அமைக்கிறார். இதன் பின்னணி இசையை அவர் நேற்று தொடங்கியுள்ளார். இதன் முதல் பாடலை அடுத்த மாதம் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பாடல் வெளியீட்டு விழாவைப் பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in