“தன்னடக்கத்தை நிறுத்துங்கள்” - கமல்ஹாசனை புகழ்ந்த அமிதாப் பச்சன் 

“தன்னடக்கத்தை நிறுத்துங்கள்” - கமல்ஹாசனை புகழ்ந்த அமிதாப் பச்சன் 
Updated on
1 min read

அமெரிக்கா: “இவ்வளவு அடக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் கமல். நீங்கள் எங்கள் அனைவரையும் விட சிறந்த நடிகர்” என நடிகர் கமல்ஹாசனை அமிதாப் பச்சன் புகழ்ந்து பேசியுள்ளார்.

தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்த ‘மகாநடி’ படத்தை இயக்கியவர் நாக் அஸ்வின். அவரின் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகும் படம் ‘Kalki 2898AD’. பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, ராணா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகக்கூடிய இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது.

படத்தின் அறிமுக விழா அமெரிக்காவின் சான் டியோகோ நகரின் காமிக் கான் சர்வதேச விழாவுடன் நடைபெற்றது. இந்தப் படம் குறித்த கலைந்துரையாடலின்போது, பேசிய கமல்ஹாசன், “படத்தில் நடிக்க நான் ஒப்புகொண்டதற்கு முக்கியமான காரணம் நான் அனலாக் ஃபார்மெட் சினிமாவிலிருந்து வந்தவன். நெகட்டிவ் இல்லாமல் பாசிட்டிவ் இல்லை. அதனால் ஒரு படத்தில் நெகட்டிவ் ரோல் என்பது முக்கியமானது. அமிதாப் பச்சன் வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே பெருமை” என்றார். உடனே குறுக்கிட்ட அமிதாப், “இவ்வளவு அடக்கமாக இருப்பதை நிறுத்துங்கள் கமல். நீங்கள் எங்கள் எல்லோரையும் விட சிறந்த நடிகர்” என பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in