

நடிகர் பிரபுதேவா தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நேற்று வந்தார். விஐபி பிரேக் நேரத்தில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர், ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த, பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர். பின்னர், கோயிலுக்கு வெளியே வந்த பிரபுதேவாவை ரசிகர்கள் சூழ்ந்துக்கொண்டு வாழ்த்துகளை தெரிவித்ததோடு, அவருடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டினர்