தமிழ் சினிமா
லோகேஷ் இயக்கத்தில் ரஜினி: உறுதிப்படுத்திய நடிகர்
சென்னை: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ‘ஜெயிலர்’, தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ படங்களை முடித்திருக்கும் ரஜினிகாந்த், சில நாட்களுக்கு முன் மாலத்தீவுக்குச் சென்றார். அங்கு ஓய்வில் இருக்கும் அவர் அடுத்து ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் ‘லியோ’ படத்தில் நடித்துள்ள வில்லன் நடிகர் பாபு ஆண்டனி, இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் இதைத் தெரிவித்துள்ளார். லோகேஷ் இயக்கத்தில் ரஜினியின் 171-வது படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
