விஜய், அஜித்துடன் ஒப்பிடப்படுவதால் சலனமடைய மாட்டேன்: சூர்யா

விஜய், அஜித்துடன் ஒப்பிடப்படுவதால் சலனமடைய மாட்டேன்: சூர்யா
Updated on
1 min read

விஜய், அஜித்துடன் ஒப்பிடப்படுவதால் தான் சலனமடைய போவதில்லை என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சூர்யா. சமந்தா, வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'அஞ்சான்' படத்தை இயக்கி இருக்கிறார் லிங்குசாமி. யுவன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. யு.டிவி நிறுவனம் இப்படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிட இருக்கிறது.

விஜய், அஜித்தோடு ஒப்பிட்டு சூர்யா ரசிகர்கள் எப்போதுமே கருத்து தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் சூர்யா, வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் விஜய், அஜித்துடன் ஒப்பிடுவதற்கு பதிலளித்திருக்கிறார்.

"என்னை விட வயசுல, அனுபவத்துல அவங்க சீனியர்ஸ். இப்போ அந்த இடத்துல அவங்க எஸ்டாபிளிஷ் ஆனதுக்குப் பின்னால, அவங்களோட 25 வருஷ கடின உழைப்பு இருக்கு. அதுக்கான பலன் தான், அவ்வளவு பெரிய ஃபேன் ஃபாலோயிங். அது ஒரே ராத்திரியில் நடந்துடக்கூடிய விஷயம் இல்லை.

இன்னொண்ணு, இப்படியான சில விஷயங்கள்னு எனக்கு எந்த இலக்கும் இல்லை. ஒவ்வொரு படத்துலயும் புதுசா ஏதாச்சும் கத்துக்கணும்னு பார்த்துப் பார்த்து புராஜெக்ட் பிடிக்கிறேன். அது இத்தனை வருஷம் கழிச்சு இந்த இடத்துல நிறுத்தும்னு எனக்கு எந்த எதிர்பார்ப்பும் வெச்சுக்காமத்தான் டிராவல் பண்றேன். அதனால் அந்த ஒப்பீடுகள் என்னைக் கொஞ்சமும் சலனப்படுத்தாது" என்று கூறியிருக்கிறார் சூர்யா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in