கீர்த்தி சுரேஷின் ‘கண்ணிவெடி’ படப் பணிகள் தொடக்கம் 

கீர்த்தி சுரேஷின் ‘கண்ணிவெடி’ படப் பணிகள் தொடக்கம் 
Updated on
1 min read

சென்னை: ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபத்திரத்தில் நடிக்கும் புதிய படத்துக்கு ‘கண்ணிவெடி’ என பெயரிடப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இந்தாண்டு ‘தசரா’, ‘மாமன்னன்’ படங்கள் வெளியாகின. இந்தப் படங்களைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு ‘கண்ணிவெடி’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் கணேஷ் ராஜ் படத்தை இயகுக்கிறார். பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட இப்படம் தொழில்நுட்பம் சார்ந்து சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்படம் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

படம் குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், “கண்ணிவெடி திரைப்படம் பரபரப்பான கதை சொல்லல் பாணியில் ரசிகரகளுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வித்தியாசமான படமாகவும் இருக்கும்” என்றார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்மையில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பர்ஹானா’ வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in