‘அதிருதா... நெஞ்சம் அதிரணும் மாமே’ - டி.ஆர் குரலில் வெளியானது ‘மார்க் ஆண்டனி’ பாடல்

‘அதிருதா... நெஞ்சம் அதிரணும் மாமே’ - டி.ஆர் குரலில் வெளியானது ‘மார்க் ஆண்டனி’ பாடல்
Updated on
1 min read

விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் டி.ராஜேந்தர் பாடியுள்ள ‘அதிருதா... நெஞ்சம் அதிரணும் மாமே’ பாடல் வெளியாகியுள்ளது.

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’, ‘பகீரா’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அதிருதா... நெஞ்சம் அதிரணும் மாமே...’ பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாடலை பொறுத்தவரை ஃபுல் எனர்ஜியுடன் ஹை பிச்சில் பாடுகிறார் டி.ராஜேந்தர். பாடல் வரிகளை அசல் கோலாரும், ஆதிக் ரவிச்சந்திரனும் இணைந்து எழுதியுள்ளனர். ரசிகர்களிடையே பாடல் கவனம் பெற்று வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in