திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? - நடிகை சதா விளக்கம்

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? - நடிகை சதா விளக்கம்
Updated on
1 min read

சென்னை: ‘ஜெயம்’ படம் மூலம் தமிழில், நடிகையாக அறிமுகமானவர் சதா. இந்தப் படம் 2003-ம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி உட்பட பல படங்களில் நடித்த அவர், தெலுங்கு, இந்தியிலும் நடித்து வந்தார். இந்நிலையில் 39 வயதான சதா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் திருமணம் செய்துகொள்ளாதது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: திருமணம் செய்து கொண்டால் சுதந்திரத்தை இழக்கிறோம். அதனால் திருமணம் பற்றி யோசிக்கவில்லை. இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் விரும்பியதைச் செய்கிறேன். திருமணம் செய்துகொண்டால் இது முடியுமா என்பது தெரியவில்லை. திருமணப் பந்தத்தில் புரிந்துகொள்பவர் கிடைத்தால் பரவாயில்லை. இல்லை என்றால் அது சரியாக அமையாது. இந்தக் காலகட்டத்தில் பலர் ஆடம்பரமாகத்திருமணம் செய்துகொண்டு, சில நாட்களிலேயே பிரிந்துவிடுகிறார்கள். அதற்குத் திருமணம் செய்யாமலேயே இருக்கலாமே?

இவ்வாறு சதா தெரிவித்துள்ளார். அவரின் இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in