

நடிகர் சந்தானம் அடுத்து நாயகனாக நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ (DD Returns) படத்தின் ட்ரெய்லர் வெள்ளிக்கிழமை வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு சந்தானம் நடிப்பில் ‘குலு குலு’, ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படங்கள் வெளியாகின. இதையடுத்து, ஆர்கே என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. பிரேம் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், ஃபெசி விஜயன், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீனா, பிபின், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைக்கிறார். அண்மையில் வெளியான டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் நாளை (ஜூலை 14) ட்ரெய்லர் வெளியாக உள்ளது. காமெடி ஹாரர் ஜானரில் உருவாகும் இப்படம் இம்மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது தவிர, ‘கிக்’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.