கமல் -வினோத் பட டிஜிட்டல் உரிமை ரூ.125 கோடியா?

கமல் -வினோத் பட டிஜிட்டல் உரிமை ரூ.125 கோடியா?
Updated on
1 min read

சென்னை: அஜித் நடித்த ‘துணிவு’ படத்தை அடுத்து கமல்ஹாசனின் 233-வது படத்தை இயக்குகிறார், ஹெச். வினோத். இதன் கதையை கமல்ஹாசன் எழுதியுள்ளார். இந்தப் படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை, முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று ரூ.125 கோடிக்கு வாங்கி உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளுக்கு இந்த உரிமை வாங்கப்பட்டுள்ளது.

படமே தொடங்காத நிலையில், இதன் டிஜிட்டல் உரிமை இவ்வளவு கோடிக்கு விற்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in