

சென்னை: தமிழ், தெலுங்கு மொழிகளில் நாயகியாக நடித்து வரும் சாய் பல்லவி, இப்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. அதில் நடிகை சாய் பல்லவியும் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பு இடைவெளியில் சாய் பல்லவி அமர்நாத் கோவிலுக்கு சென்று பனி லிங்கத்தை வழிபட்டுள்ளார். அப்போது அங்கு வந்திருந்த ரசிகர்களுடன் செல்ஃபியும் எடுத்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.