வசந்த் ரவி படத்தில் மெஹ்ரின், அனிகா

விழாவில், மெஹ்ரின், அனிகா, வசந்த் ரவி, இயக்குநர் அமீர், சபரீஷ் நந்தா, ஜாபர் சாதிக்.
விழாவில், மெஹ்ரின், அனிகா, வசந்த் ரவி, இயக்குநர் அமீர், சபரீஷ் நந்தா, ஜாபர் சாதிக்.
Updated on
1 min read

சென்னை: நடிகர் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை சபரீஷ் நந்தா இயக்குகிறார். இவர் ஏற்கனவே, ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ‘வி ஆர் பிரெக்னன்ட்’ என்ற தொடரை இயக்கியவர்.

இந்தப் படத்தை ஜெ.எஸ்.எம். புரொடக் ஷன்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் இர்ஃபான் மாலிக் இணைந்து தயாரிக்கின்றனர். வசந்த் ரவி ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா நடிக்கிறார். இவர், தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்தவர். விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில், நடன இயக்குனர் கல்யாண் உட்பட பலர் நடிக்கின்றனர். ‘சொப்பன சுந்தரி’ படத்துக்கு இசையமைத்த அஜ்மல் தசீன் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநரும் நடிகருமான அமீர் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in