‘ராக்கெட்ரி’ வெளியாகி ஒரு வருடம்: படக்குழுவுக்கு மாதவன் பரிசு

‘ராக்கெட்ரி’ வெளியாகி ஒரு வருடம்: படக்குழுவுக்கு மாதவன் பரிசு
Updated on
1 min read

சென்னை: நடிகர் மாதவன், இயக்கி நடித்த படம், ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’. இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவானது. இதில் சிம்ரன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் உருவான இந்தப் படத்தில் ஷாருக்கான் மற்றும் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் கடந்த வருடம் ஜூலை 1-ம் தேதி வெளியானது. இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி ஒரு வருடம் ஆனதை ஓட்டி, படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை மாதவன் பரிசாக வழங்கியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in