திருப்பதியில் மொட்டை அடித்துக்கொண்ட நடிகர் தனுஷ் - வைரலாகும் புகைப்படங்கள்

திருப்பதியில் மொட்டை அடித்துக்கொண்ட நடிகர் தனுஷ் - வைரலாகும் புகைப்படங்கள்
Updated on
1 min read

திருப்பதி: ‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக நடிகர் தனுஷ் நீண்ட தலைமுடியும், தாடியும் வளர்த்து வந்த நிலையில் இன்று திருப்பதில் மொட்டையடித்து தனது கெட்டப்பை மாற்றியுள்ளார்.

இன்று காலை திருப்பதி சென்ற நடிகர் தனுஷ் மொட்டை அடித்து பின்பு சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் தனுஷ் மட்டுமல்லாது, அவருடைய இரண்டு மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா இருவரும் மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளனர்.

தனுஷ் மொட்டை அடித்து, மாஸ்க், தொப்பி அணிந்திருந்த போதிலும், ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டு புகைப்படங்களை எடுத்துள்ளனர். இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷை பொறுத்தவரை அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்துக்காக நீண்ட தாடியும் தலைமுடியும் வளர்த்து வந்தார். அதே கெட்டப்பில் ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘தேரே இஷ்க் மே’ (Tere Ishk Mein) படத்தின் அறிவிப்பு வீடியோவிலும் தோன்றியிருந்தார். இந்நிலையில், தற்போது அவர் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றியிருப்பதன் மூலம் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் அவருக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டதா அல்லது படத்துக்காக தனது தோற்றத்தை மாற்றியிருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in