Published : 03 Jul 2023 06:49 AM
Last Updated : 03 Jul 2023 06:49 AM
சென்னை: சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மவுனகுரு தயாரித்துள்ள படம், ‘ராயர் பரம்பரை’. ராம்நாத் டி. இயக்கியுள்ள இந்தப் படத்தில் கிருஷ்ணா, சரண்யா, கிருத்திகா, ஆனந்த்ராஜ், கஸ்தூரி, கே.ஆர். விஜயா உட்பட பலர் நடித்துள்ளனர். காமெடி கலந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இந்தப் படம், வரும் 7ம் தேதி வெளியாகிறது. கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார்.
இந்நிலையில் படம் பற்றி, செய்தியாளர் களிடம் பேசிய இயக்குநர் ராம்நாத் டி கூறும்போது, “நாம் ஒரு கதையை எவ்வளவு சிரமப்பட்டு எழுதினாலும் கதாநாயகன் சரியாக அமையவில்லை என்றால் படம் நிற்காது. கிருஷ்ணா நல்ல நடிகர். இந்தப் படத்தை நான் உருவாக்கக் காரணம், நான் கண்ட ஓர் உண்மைச் சம்பவம். சமுதாயத்தின் மீது எனக்கு கோபம் இருக்கிறது. அதுதான் இந்தப் படம் உருவாகக் காரணம்” என்றார்.
நடிகர் கிருஷ்ணா கூறும்போது, “கரோனா முடிந்ததும் நான் ஒப்பந்தமான படம் இது. நகைச்சுவை படம். நான் முன்பு இது போன்ற கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. ரசிகர்களுக்கு இந்தப் படம் புது அனுபவம் கொடுக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT