ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப லிட்டில் சேம்ப் - சீசன் 3

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப லிட்டில் சேம்ப் - சீசன் 3
Updated on
1 min read

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி ‘சரிகமப’. சீனியர்களுக்கான இந்த நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தது.இந‌் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக புருஷோத்தமன் தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து ‘லிட்டில் சேம்ப் சீசன் 3, ஜூலை 1-ம் தேதி தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக 20 முதல் 25 திறமையான போட்டியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இந்த ஆடிஷன் எபிசோடு நேற்று ஒளிபரப்பானது. இன்றும் ஒளிபரப்பாக இருக்கிறது. வழக்கம்போல அர்ச்சனா தொகுத்து வழங்க நிவாஸ், விஜய் பிரகாஷ், நடிகை அபிராமி ஆகியோர் இந்த சீசன் முழுவதும் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். மெகா ஆடிஷனில் மட்டும் வைக்கம் விஜயலட்சுமி, மனோ சிறப்பு நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சி சனி, ஞாயிறுகளில் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in