தமிழில் அறிமுகமாக ‘சைத்தான்’ நடிகை ஆசை

தமிழில் அறிமுகமாக ‘சைத்தான்’ நடிகை ஆசை
Updated on
1 min read

ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கும் ‘சேவ் த டைகர்’, ‘சைத்தான்’ வெப் தொடர்களில் நடித்திருப்பவர் தேவியானி சர்மா. டெல்லியை சேர்ந்த அவர் இப்போது தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். ‘இந்து தமிழ் திசை’யிடம் பேசிய அவர் கூறியதாவது:

தெலுங்கில் ‘பானுமதி ராமகிருஷ்ணா’ படத்தில் நவீன் சந்திரா ஜோடியாக அறிமுகமானேன். பிறகு ‘சேவ் த டைகர்’, ‘சைத்தான்’ ஆகிய வெப் தொடர்களில் நடித்தேன். ‘சேவ் த டைகர்’ தொடரில் நவீன பெண்ணாக, பெண்ணியவாதியாக நடித்திருந்தேன். சிறந்த கேரக்டர். ‘சைத்தான்’ தொடரில் கிராமத்து பெண்ணாக, அழுத்தமான கேரக்டரில் நடித்திருந்தேன். பழிவாங்கும் கதை என்பதால் என் நடிப்புக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

நான் நாடகத்துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். நடனம் கற்றுள்ளேன். கலைக்கு மொழி பிரச்சினையில்லை. தென்னிந்திய திரையுலகில் முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பது என் ஆசை. தமிழிலும், நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன். தமிழ்ப் படங்களையும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். இயக்குநர்களில் மணிரத்னம், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோரைப் பிடிக்கும். நடிகர்களில் எனக்கு சிம்புவை அதிகம் பிடிக்கும். அவருடன் நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏன் என்று தெரியவில்லை. இவ்வாறு தேவியானி சர்மா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in