துருவ் விக்ரம் படத்துக்குப் பிறகு ஜீவாவுடன் இணையும் ‘டாடா’ பட இயக்குநர்

துருவ் விக்ரம் படத்துக்குப் பிறகு ஜீவாவுடன் இணையும் ‘டாடா’ பட இயக்குநர்
Updated on
1 min read

‘டாடா’ படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு விரைவில் துருவ் விக்ரமை வைத்து படம் இயக்குகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் நடிகர் ஜீவாவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ‘டாடா’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை கணேஷ் கே பாபு இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லைகா புரொடக்‌ஷன் நிறுவனம் ஒரு படத்துக்காக அவரை ஒப்பந்தம் செய்தது. இந்தப் படத்தின் நாயகனாக துருவ் விக்ரம் நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கும் படத்துக்குப் பிறகு துருவ் விக்ரம் கணேஷ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இதனையடுத்து கணேஷ் இயக்கும் மூன்றாவது படத்தில் ஜீவா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாக உள்ளதாக தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in