“மாமன்னன் ஒரு எமோஷன்” - இயக்குநர் மாரிசெல்வராஜை பாராட்டிய தனுஷ்

“மாமன்னன் ஒரு எமோஷன்” - இயக்குநர் மாரிசெல்வராஜை பாராட்டிய தனுஷ்
Updated on
1 min read

“மாமன்னன் திரைப்படம் ஒரு எமோஷன்” எனக் கூறி படத்தின் இயக்குநர் மாரிசெல்வராஜை நடிகர் தனுஷ் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாரிசெல்வராஜின் ‘மாமன்னன்’ ஒரு எமோஷன். மாரிசெல்வராஜை ஆரத் தழுவிக் கொள்கிறேன். வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஃபஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் சிறப்பான பங்களிப்பை செலுத்தியுள்ளனர். இடைவேளைக்காட்சியின்போது திரையரங்குகள் அதிரப்போகின்றன. இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் பியூடிஃபுல்” எனப் பதிவிட்டுள்ளார்.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் நாளை (ஜூன்29) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in