

சென்னை: அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் உட்பட பலர் நடித்த படம், ‘ஓ மை கடவுளே’. விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் கவுரவ வேடத்தில் நடித்திருந்தனர். 2020-ம் அண்டு வெளியாகி வெற்றிப் பெற்ற இந்த ரொமான்டிக் காமெடி படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். பின்னர் இது தெலுங்கில் ‘ஓரி தேவுடா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதையும் அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார்.
இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் ஆக இருக்கிறது. இந்தி படத்தையும் அஸ்வத் மாரிமுத்து இயக்க இருக்கிறார். அதற்கிடையில் அவர் ஃபேன்டஸி படம் ஒன்றை இயக்க இருக்கிறார். தில் ராஜூ தயாரிக்க இருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கில் உருவாக இருக்கிறது. இதில் நடிக்க முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.